69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
Immanuel sekaran memorial Ministers Pay Homage
Published on
Summary

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன்ராஜா, ராஜீவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இமானுவேல் சேகரனார் நினைவு தினம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

அமைச்சர்கள் மரியாதை

இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபா ராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன்ராஜா, ராஜீவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

அதிமுக

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

அமைச்சர் வன்னியரசு

அதேபோல் அ.ம.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைச்சர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பலத்த பாதுகாப்பு

பாதுகாப்பு பணிக்காக தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மணிவண்ணன் உள்ளிட்ட 3 டி.ஐ.ஜி.க்கள், 24 மாவட்ட எஸ்.பி.க்கள், கூடுதல் எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com