த.வெ.க.வில் 60 எம்.எல்.ஏ.-க்கள் அதிருப்தி: ஜனாதிபதி ஆட்சி, மீண்டும் தேர்தல்- முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி

சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம்.
திமுக ரகுபதி
திமுக ரகுபதி
Published on: 

காங்கிரஸ் உடன் நாங்கள் தொடர்பே வைத்துக் கொள்ளவில்லை. வேண்டாம் சார்., அவர்களை விட்டுவிட்டு வந்துவிட்டோம். எங்களுக்கு ஏன் பேசனும்?. எங்களுக்கு தேவையே இல்லை. தமிழ்நாட்டு மக்கள் எங்களை தாங்கிப் பிடிக்க தயாராக இருக்கிறார்கள்.

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை எல்லா இடங்களிலும் பார்க்கிறீர்கள். அங்கே இருக்கும் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். வரம்பு மீறி பேசுகிறார்கள். இதற்கு முன் இவ்வாறு நடந்ததே கிடையாது.

த.வெ.க. எம்.எல்.ஏ.-க்கள் 60 பேர் அதிருப்தி

த.வெ.க. எம்.எல்.ஏ.-க்கள் அதிருப்தியில் இருப்பதாக நான் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறேன். தி.மு.க. குதிரைப்பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது. எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாது. வெளியே இருக்கிறவர்களிடம் பணம் இருக்கலாம் தவிர, திமுக-வின் யாரையும் வாங்கும் அளவிற்கு பணம் கிடையாது. மனமாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி திமுக-வுக்கு உண்டு.

தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு, நாம் 60 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து ஒரு நல்லாட்சியை அமைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் கசிகின்றன. அது உறுதிப்படுத்த முடியாத ஒன்று. 30 பேர் அதிருப்பதியில் இருப்பதாக அதிமுக-வில் கூட பேசிக்கிட்டு இருக்காங்க.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை திருப்திப்படுத்த முயற்சி

த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதிருப்தியில் இருப்பவர்களை திருப்திப்படுத்த பார்க்கிறார்கள். த.வெ.க.வில் 109 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

அதில் 60 பேர் வெளியே வந்து விட்டால், பாதிக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை ஆகும். அப்படி வந்தால் அவர்கள்தான் பெரிய கட்சி என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் உண்டு.

ஜனாதிபதி ஆட்சி, மீண்டும் தேர்தல்

அதுபோன்ற சூழ்நிலை உருவாகிறபோது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். இல்லை என்றால் ஆளுநர் தலையீடு செய்து சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்படலாம். அப்போது ஜனாதிபதி ஆட்சிதான் நடக்கும். அதன்பின் யாருக்காவது மெஜாரிட்டி நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

நிரூபிக்கப்படவில்லை என்றால் மீண்டும் தேர்தல்தான் வரும். அப்போது திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது.

சட்டமன்றத்தை சஸ்பெண்ட் செய்தால் குடியரசு ஆட்சி வந்துதான் தீர வேண்டும். அதைவிட முக்கியமாக மக்கள் இன்று கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் கஷ்டம்.

மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்

20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதாக சொல்கிறார்கள். இப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். உரிமைத் தொகை பெறுவோர் எண்ணிக்கை இன்னும் குறையும் நிலையில் அதிருப்பதி அதிகரிக்கும்.

இவ்வாறு ரகுபதி பேசினார்.

X