அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா- விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

விஜய் வசந்த் எம்.பி. 390 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
Congress MP Vijay Vasanth
Published on

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் 58-வது பட்டாளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு விவேகானந்தா கல்விக் கழக செயலாளர் சி. ராஜன் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

தலைவர் ஜி.என். பாலமுருகன் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் டி.சி.மகேஷ் வரவேற்புரையாற்றி, பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் வசந்த் எம்.பி. 390 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில்,"மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வி மற்றும் அறிவை நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளைடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்விக்கழக துணைத்தலைவர்கள் வழக்கறிஞர்கள் கே. எஸ். மணி, ஜி. சந்திரமோகன், பொருளாளர் டாக்டர் எஸ். பிரியதர்ஷினி, இணைச் செயலாளர் எஸ். ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பொறியாளர் பி.வி.ஆனந்த், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தமிழ் துறைத் தலைவர் முனைவர் கே. இளங்குமார் ஒருங்கிணைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com