சிவகங்கை அருகே 500 ஏக்கரில் பாதிப்பு- கண்மாயில் தேங்கிய நீரை இறைத்து ஊற்றி பயிரை காக்க போராடி வரும் விவசாயிகள்

அரசு பயிர் காப்பீடு மூலமாகவாவது உதவ முன்வரவேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கேட்டுக்கொண்டனர்.
சிவகங்கை அருகே 500 ஏக்கரில் பாதிப்பு- கண்மாயில் தேங்கிய நீரை இறைத்து ஊற்றி பயிரை காக்க போராடி வரும் விவசாயிகள்
Published on: 
Summary

விவசாயத்தை கேள்விக்குறியாக பார்க்கும் விவசாயிகள் நடவு செய்த பயிர்கள் சற்று வளர்ந்து காணப்படுவதால் அதனை காக்க கண்மாயில் வாய்க்கால் வழியாக பாய்ச்ச முடியாமல் கிடக்கும் குறைந்த அளவு நீரை இறவை பலகையை கொண்டு கைகள் மூலம் இறைத்து பாய்ச்சி வருகின்றனர்.

சிவகங்கை அருகே உள்ளது சோழபுரம் கிராமம். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் சூழலில் இவர்கள் அனைவருமே விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டு செய்து வருகின்றனர். இங்குள்ள கண்மாய்களை நம்பி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்த கிராம மக்கள் இந்த ஆண்டு பருவ மழையை நம்பி தங்களது வயல்களில் உழவுபணியை மேற் கொண்டு வந்தனர். ஆனால் போதிய அளவில் மழை பெய்யாததால் வயல்களில் விதைத்துள்ள பயிர்களின் நிலைமை கேள்விக்குறியானது.

கால்வாய்

இருந்தபோதிலும் கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரை நம்பி ஏக்கர் ஒன்றிற்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவுச் செய்து நெல் நடவு செய்துள்ளனர். ஆனால் மழை பொய்த்து போன நிலையில் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு கால்வாய் மூலமாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அதுவும் சில ஆண்டுகளாக திறக்கப்படாவில்லை.

இதனால் இந்த ஆண்டு விவசாயத்தை கேள்விக்குறியாக பார்க்கும் விவசாயிகள் நடவு செய்த பயிர்கள் சற்று வளர்ந்து காணப்படுவதால் அதனை காக்க கண்மாயில் வாய்க்கால் வழியாக பாய்ச்ச முடியாமல் கிடக்கும் குறைந்த அளவு நீரை இறவை பலகையை கொண்டு கைகள் மூலம் இறைத்து பாய்ச்சி வருகின்றனர்.

விவசாயம்

மேலும் அந்த நீரும் போதாது என்றும், இருக்க கூடிய பயிரை காக்க முயற்சித்து வருவதாகவும் மழை பெய்தால் மட்டுமே அடுத்து பயிரை காக்க முடியும் என்றும் இல்லை என்றால் இந்த ஆண்டும் விவசாயம் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அரசு பயிர் காப்பீடு மூலமாகவாவது உதவ முன்வரவேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கேட்டுக்கொண்டனர்.

X