கிழக்கு கடற்கரை சாலையில் அதிரடி சோதனை : போதை மாத்திரைகளை கடத்திய 5 பெண்கள் அதிரடி கைது

சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள் தங்கி இருக்கும் ஆண்கள் விடுதிகளில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனவும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைது
Published on: 
Summary

தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், ஓ.எம்.ஆர். மற்றும் ஈ.சி.ஆர். பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. 5 பெண்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்ட இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீசார் இன்று அதிகாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பது பற்றி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தீவிர சோதனை

தாம்பரம் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில், பள்ளிக்கரணை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 காவல் நிலைய எல்லைகளில் இந்தச் சோதனை நடைபெற்றது. பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில், 3 உதவி ஆணையர்கள், 10 ஆய்வாளர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் என 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள் தங்கி இருக்கும் ஆண்கள் விடுதிகளில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனவும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கைது

சென்னை கண்ணகி நகர் குடியிருப்புப் பகுதியில் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த சோதனையில், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 5 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அதிகாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு ஓ.எம்.ஆர். மற்றும் ஈ.சி.ஆர். பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X