

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையான 14-ந்தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று வியாழக்கிழமை 585 சிறப்பு பஸ்களும் நாளை (வெள்ளிக்கிழமை) 1,255 பஸ்களும் 12-ந் தேதி (சனிக்கிழமை) 1,030 பஸ்களும், 13-ந் தேதி 650 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மேற்கண்ட இந்த நாட்களில் 585 பஸ்களும் இயக்கப்படுகிறது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தலா 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
மேலும் 14-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 765 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இன்று முதல் திங்கள்கிழமை வரை பயணம் செய்வதற்கு 95 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.