2-வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு - முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடக்கிறது

பொறுப்பேற்ற 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்தது.
CM Vijay
Published on: 
Summary

முதலமைச்சர் விஜய் தலைமையில் கோவளத்தில் இன்று 2-வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது 67,452 கோடி ரூபாய் மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது பொறுப்பேற்ற 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்தது.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் கோவளத்தில் இன்று 2-வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டின் இரண்டாவது பதிப்பிற்காக நாம் அனைவரும் ஒன்றுகூடுகிறோம்.

கடந்த ஆறு மாதங்களில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தான பிறகு என்ன நடக்கிறது என்பதே உண்மையான வெற்றிக்கான அளவுகோலாகும்.

திட்டங்கள் செயல்பாட்டிற்கு முன்னேறுகின்றனவா? முதலீடுகள் தொழிற்சாலைகளாகவும், உற்பத்தியாகவும், வேலைவாய்ப்புகளாகவும் மாறுகின்றனவா? மக்களுக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் எங்களது முழுக் கவனமும் உள்ளது.

முதலமைச்சர் விஜயின் தலைமையின் கீழ், தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யவும், திட்டங்கள் உறுதியுடனும் தடையின்றியும் முன்னேறவும், முதலீடுகள் தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளாகவும், வாய்ப்புகளாகவும், வளமான வாழ்வாகவும் மாறவும் வழிவகுக்கும் ஒரு வலுவான தொழில்துறைச் சூழலை உருவாக்குவதே எங்களது உறுதிப்பாடாகும்” என்று தெரிவித்துள்ளார்.

X