பவுர்ணமி, சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,725 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்க ளுக்கு 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்
சிறப்பு பஸ்கள்
Published on: 
Summary

தமிழகத்தில் பவுர்ணமி மற்றும் சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு 2,725 சிறப்பு பஸ்கள் இயக்கம். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக 25-ந்தேதி மட்டும் 805 பஸ்கள் இயக்கப்படும்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு பஸ்கள்

முகூர்த்தம், பவுர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 775 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 485 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 95 பஸ்களும், நாளை 85 பஸ்களும், 25-ந்தேதி திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்க ளுக்கு 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து 23-ந்தேதி மற்றும் 24-ந்தேதி ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 65 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 805 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com