மாலத்தீவு கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் 25 பேர் கைது - மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கடிதம்!

இவ்விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாலத்தீவு கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் 25 பேர் கைது - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் கடிதம்!
Published on: 

மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள், அவர்கள் பயன்படுத்திய மூன்று மீன்பிடி விசைப்படகுகளுடன், மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் 13.10.2026 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். இவ்விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக மாலத்தீவு அரசுடன் தூதரகத்தின் வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக மீட்பதற்கும், மீனவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் , இவ்விவகாரத்தில் தலையிட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்திற்கும் மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com