நாதக வேட்பாளர் உட்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகை கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட கார்த்திகா
Published on: 
Summary

கார்த்திகா மற்றும் 8 பேர் மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 மணி நேர விசாரணைக்கு பின் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார் ஆகியோரை கோவையில் உள்ள அவர்களது வீட்டுக்கு சென்று போலீசார் நேற்று கைது செய்தனர்.

வழக்கு பதிவு

மேலும் தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சஞ்சய் காந்தி, தாராபுரம் தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, ஷேக்பரீத், தாராபுரம் நகர பொறுப்பாளர் சூர்யா, மாணவர் பாசறை செயலாளர் கோகுல், சோழவந்தான் இளைஞர் பாசறை செயலாளர் விக்னேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போலீசார் வழக்க பதிவு செய்தனர்.

கண்டனம்

கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்ற காவல்

இதனிடையே, கார்த்திகா உட்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்கள் நேற்றிரவு தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com