டெல்லியில் கடன் விவரங்களை காட்டி விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 71-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடன் விவரங்களை காட்டி விவசாயிகள் போராட்டம்
Published on

புதுடெல்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 71-வது நாளை எட்டியது.

இதையொட்டி விவசாயிகள் தங்களது கழுத்தில் அட்டைகளை தொங்கவிட்டு போராட்டம் நடத்தினர். அதில் அவர்கள் வங்கிகளில் பெற்ற கடன் விவரங்களும், நிலபுலன் உள்ளிட்ட விவரங்களும் எழுதப்பட்டு இருந்தன. மேலும், தங்களது வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகள் அல்ல என்று பலர் விமர்சனம் செய்ததாகவும், அவர்களுக்கு தாங்கள் விவசாயிகள்தான் என்பதை தெரியப்படுத்தவே கழுத்தில் அட்டைகளை தொங்க விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com