சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இன்று சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி
Published on

சென்னை:

தமிழக சட்டசபை சபாநாயகராக இருப்பவர் தனபால், இன்று காலை உயர்ரத்த அழுத்தம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனபால், தற்போது நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை முடிந்த பின்னர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் மருத்துவமனைக்குச் சென்று தனபாலிடம் நலம் விசாரித்துள்ளார். முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் சிலர் சென்றுள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள நாட்களில் துணை சபாநாயகர் அவையை வழி நடத்திச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com