போராட்டம் நடத்தினால் வருமா? யாகம் நடத்தியதால் தான் மழை வந்தது- தமிழிசை கூறுகிறார்

தண்ணீருக்காக திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா? யாகம் நடத்தியதால் தான் மழைபெய்துள்ளது என்று தமிழிசை கூறியுள்ளார்.
போராட்டம் நடத்தினால் வருமா? யாகம் நடத்தியதால் தான் மழை வந்தது- தமிழிசை கூறுகிறார்
Published on

சென்னை:

மழை பொய்த்ததால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை ஒருபுறம் எடுத்தாலும் இன்னொரு புறத்தில் மழை வேண்டி யாகம் நடத்தவும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி அமைச்சர்களும், அ.தி.மு.க.வினரும் யாகங்கள் நடத்தினார்கள்.

இதற்கிடையில் தண்ணீர் பிரச்சினைக்காக போராட்டம் நடத்திவரும் தி.மு.க. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க திறமையற்ற அரசு யாகம் நடத்துகிறது என்று விமர்சித்தது.

இந்த நிலையில் சென்னை உள்பட பல இடங்களில் நேற்று மழையும் பெய்தது. வெயிலிலும், தண்ணீர் இல்லாமலும் தவித்து வரும் மக்களுக்கு இது சிறு ஆறுதலை கொடுத்தது.

இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தி.மு.க.வினர் யாகம் நடத்தினாலும் எதிர்க்கிறார்கள் யோகா நடத்தினாலும் எதிர்க்கிறார்கள். ஆனால் தண்ணீருக்காக போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா? யாகம் நடத்தியதால் தான் மழைபெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com