உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் - தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் எந்தக் குழப்பத்திற்கும் இடமளிக்கக் கூடாது என தொண்டர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜயகாந்த்
விஜயகாந்த்
Published on

சென்னை:

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க.வை சேர்ந்த அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும்.

மேலும், வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க.விற்கு முக்கியமான தேர்தலாக அமையும். உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் என்பது நமது கட்சிக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதால், சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com