வேலூர் கலெக்டர், அணைக்கட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், அணைக்கட்டு தொகுதி நந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலெக்டர் சண்முகசுந்தரம்-நந்தகுமார் எம்.எல்.ஏ.
கலெக்டர் சண்முகசுந்தரம்-நந்தகுமார் எம்.எல்.ஏ.
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தினசரி 600-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வீட்டில் பணியாற்றும் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனிடையே அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. இதையடுத்து வீட்டு தனிமையில் இருந்த அவருக்கு லோசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 8-ந்தேதி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் சண்முகசுந்தரம், நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போது 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் எஸ்.பி. செல்வகுமாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com