

வேகமாக பரவுகிற திறன் கொண்டுள்ள டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்குமா என்பது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.
மே மாதம் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 983 பேரிடம் இருந்து பெறப்பட்ட 8 லட்சத்து 11 ஆயிரத்து 624 சோதனை முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதன் முடிவுகள் வருமாறு:-
* ஆல்பா வைரசுடன் ஒப்பிடுகையில் டெல்டா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா (இந்தியாவில் இதுதான் கோவிஷீல்டு) தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன. ஆனால் புதிய தொற்றுகளுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை கொண்டுள்ளன.
* கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
* தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், எத்தனை பேருக்கு தொற்றை பரப்புவார்கள் என்பது தெரியவில்லை.
* தடுப்பூசிகள் கொரோனா வருவதற்கான வாய்ப்பை குறைக்கின்றன. ஆனால் கொரோனா வருவதற்கான வாய்ப்பை தவிர்ப்பதில்லை.
இவ்வாறு அதில் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்...உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.07 கோடியை கடந்தது