இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழக அமைச்சரவை
தமிழக அமைச்சரவை
Published on

சென்னை: 

தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார். 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com