

சென்னை:
தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும்.
* தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும்.
* உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம்.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தமிழக அரசுக்கு தேவைப்படும் உதவிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
* தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும்.
இதையும் படியுங்கள்...சர்வதேச யோகா தினம் - நோய் நாடி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி
இவ்வாறு அவர் கூறினார்.