பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு -மும்பை திரும்புவதில் தாமதம்

பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சன்னி தியோல்
சன்னி தியோல்
Published on

சிம்லா:

பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான சன்னி தியோல் (வயது 64), தோள்பட்டை காயம் காரணமாக சமீபத்தில் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டம், மணாலி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

இந்நிலையில், சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் அமிதாப் அவாஸ்தி தெரிவித்துள்ளார். மேலும் சில தினங்கள் குல்லு மாவட்டத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

சன்னி தியோல் மற்றும் அவரது நண்பர்கள் மும்பைக்கு புறப்படவிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சன்னி தியோலின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்ததால் அவர்கள் அங்கேயே தங்கியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com