கொரோனா காலத்தில் சிறப்பான பங்காற்றியவர்கள் அன்னையர் - ரமேஷ் பொக்ரியால் பாராட்டு

சர்வதேச மகளிர் தினத்தில் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் நிஷாங்க் பொக்ரியால் இணைய வழி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால்
கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால்
Published on

புதுடெல்லி:

மத்திய கல்வி மந்திரி ரமேஷ் நிஷாங்க் பொக்ரியால் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறந்த முறையில் பங்காற்றியவர்கள் அன்னையர்.

பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, இலக்கியம் மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றில் சிறப்புடன் செயலாற்றுபவர்கள்.

தலைமைத்துவ பண்பில் உயர்ந்த தரத்தினை வெளிப்படுத்துபவர்கள்.

ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என்.ஐ.டி.க்கள் ஆகியவற்றில் சேரும் பெண்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்து உள்ளது.

தேசிய கல்வி கொள்கை 2020 ஆனது நம்முடைய சமூகத்தில் பெண்களின் கண்ணியம் மேம்பட தேவையான ஆற்றலைக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com