குஜராத் - மாநிலங்களவை தேர்தலில் 2 இடங்களையும் பாஜக கைப்பற்றியது

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பாஜக கொடி
பாஜக கொடி
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலும், பா.ஜ.க. எம்.பி. அபய் பரத்வாஜும் அண்மையில் மரணமடைந்தனர். அகமது படேலுக்கு 2023-ம் ஆண்டு வரையிலும், பரத்வாஜுக்கு 2026 வரையிலும் பதவிக் காலம் இருந்தது. அதற்கு முன்பே அவர்கள் மரணமடைந்ததால் அந்த இரு இடங்கள் காலியாகின.

இதற்கிடையே, காலியான 2 இடங்களுக்கும் மார்ச் 1-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பா.ஜ.க. சார்பில் இரு இடங்களுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தரப்பில் யாரும் நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில், குஜராத் மாநிலங்களவையில் இரு இடங்களையும் பா.ஜ.க. போட்டியின்றி கைப்பற்றியது. இதன்படி,  தினேஷ் அனவாடியாவும், ராம்பாய் மொக்ரியாவும் மாநிலங்களவை எம்.பியாக தேர்வாகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com