சென்னை போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமாருக்கு ஜனாதிபதி பதக்கம்

சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
Published on

சென்னை:

குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் அதிகாரி மணி கண்ட பிரபு ஆகியோரும் ஜனாதிபதியின் காவல் பதக்கம் பெறுகிறார்கள்.

இந்த 3 பேரின் மெச்சத் தகுந்த பணியை பாராட்டி குடியரசு தலைவரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

இதேபோல் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.க்கள் அன்பு, சந்தோஷ் குமார் உள்பட 17 பேரும் இந்திய காவல் பதக்கம் பெறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com