பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதத்தில் நடைபெறும்.
சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் ஓம் பிர்லா
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கம்போல அடுத்த மாதம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஓம் பிர்லா, பாராளுமன்ற செயலக ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 445 உறுப்பினர்கள் தனியாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்வர். 

தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும், நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அமைச்சரவை துணைக்குழுவே இறுதி முடிவு எடுக்கும். மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நம்புவதாக தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com