சட்டவிதிகளை மீறி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்- மு.க.ஸ்டாலின்

சட்டவிதிகளை மீறி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

சட்டவிதிகளை மீறி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற வலியுறுத்தி, சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டம், இந்த ஆட்சி மீதான மக்களின் கோபத்தை காட்டுகிறது. மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com