அதிமுக அல்லது பாஜகவில் இணைவது குறித்து 10 நாட்களில் முடிவு - கராத்தே தியாகராஜன்

அதிமுக அல்லது பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்து 10 நாட்களில் முடிவு எடுக்க போவதாக கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
Published on

சென்னை:

கராத்தே தியாகராஜன் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் கராத்தே பயிற்சியாளராவார். இவர் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ளார். இவர் சென்னை மாநகர முன்னாள் மேயராக (பொறுப்பு) இருந்துள்ளார். இவர் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார். சென்னை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

இதனையடுத்து கடந்த 2019-ல் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் அதிமுக அல்லது பாஜகவில் இணைவது குறித்து 10 நாட்களில் முடிவு செய்வதாக கூறினார். மேலும் கொரோனா காலத்தில் முதலமைச்சர் பழனிசாமி சிறப்பாக செயல்பட்டார், அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் எனவும் கூறியுள்ளார். 

அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் செய்ய வேண்டும் என கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com