இந்திய குடியரசு தினத்தை கவுரவிக்க டூடுல் வெளியிட்டது கூகுள்

இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்
கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்
Published on

புதுடெல்லி:

இந்தியா முழுவதும் 72வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநில தலைநகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 50 ஆண்டுக்கு பிறகு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்காமல் இந்தியாவில் குடியரசு தின விழா நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

வண்ணமயமான தேசத்தை உயிர்ப்பிக்கும் துடிப்பான கலாசாரங்களின் வரம்பை பிரதிபலிக்கும் விதமாக மும்பையை சேர்ந்த கலைஞர் ஆன்கர் பாண்டேகர் வரைந்துள்ள ஓவியத்தை கூகுள் நிறுவனம் டூடுலாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com