எதிர்க்கட்சி லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்- ஜி.கே.வாசன்

எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
ஜிகே வாசன்
ஜிகே வாசன்
Published on

சென்னை:

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 7-வது நாளை எட்டுகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. நாளை அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுகிறது.

குறுகியகால நன்மையை கூறி விவசாயிகளின் வருங்கால தொடர் வளர்ச்சி, வருமானத்தை திசை திருப்ப கூடாது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தால் அப்பாவி விவசாயிகள் பலியாகக்கூடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com