புதிய கல்விக் கொள்கையை தமிழில் வெளியிட வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

மத்திய அரசால் கொடுக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது.
ஜிகே வாசன்
ஜிகே வாசன்
Published on

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் கொடுக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. ஏன் அதனை தமிழில் வெளியிடவில்லை. அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை மத்திய கல்விக் கொள்கைக்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கையை உடனடியாக தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு மத்திய அரசு எப்பொழுதும் தமிழ் மொழிக்கு உறுதுணையாக இருக்கிறது என்று வெளிப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற நிலை எதிர்காலத்தில் எந்த முக்கிய பிரச்சனையிலும் ஏற்படாது இருக்க 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும், இந்தியா வின் அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com