சாத்தான்குளம் கோழிப்பண்ணையில் தீவிபத்து- 6 ஆயிரம் குஞ்சுகள் உயிரிழப்பு

சாத்தான்குளம் தீ விபத்தில் சேதமான கோழிபண்ணை மற்றும் கோழி குஞ்சுகள் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.
சாத்தான்குளம் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் குஞ்சுகள் இறந்து கிடப்பதை காணலாம்
சாத்தான்குளம் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் குஞ்சுகள் இறந்து கிடப்பதை காணலாம்
Published on: 

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஆர்.சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 56). இவர் கருமேனி ஆற்றுப்படுகையில் உள்ள அவரது தோட்டத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். அவரது மனைவி லட்சுமி (50) தோட்டத்தில் கோழிபண்ணை அமைத்து கடந்த 7ஆண்டுகளாக கோழி குஞ்சு வளர்த்து வருகிறார். அவரது மகன் அழகுமுத்து (31) அவருடன் இருந்து கோழிப்பண்ணையை பராமரித்து வருகிறார். தற்போது 12 நாள்களே ஆனகோழி குஞ்சுகள் பண்ணையில் இருந்துள்ளன.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் கோழி பண்ணையில் லட்சுமியும், அவரது மகனும் கோழி குஞ்சுகளுக்கு தீவனம் வைத்து கொண்டிருந்தபோது அதிவேகமாக அடித்த காற்றின் மூலம் பண்ணையில் மின்கசிவு உண்டாகி தீ பிடித்துள்ளது. உடன் லட்சுமியும், மகன் அழகுமுத்துவும் தீயை அணைக்க முயன்றனர். காற்றில் தீ மளமளவென பிடித்து எரிந்ததால் கோழி பண்ணை முழுவதும் தீ பரவியது. இதில் அழகுமுத்து மீது தீ பட்டு காயமடைந்தார். உடன் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் மாரிமுத்து தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதில் அங்கிருந்த 6 ஆயிரம் கோழி குஞ்சுகளும் தீயில் கருகி இறந்தன. இந்த தீ விபத்தில் சேதமான கோழிபண்ணை மற்றும் கோழி குஞ்சுகள் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும். தகவல் அறிந்து சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளர் மஞ்சரி, கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் மேரி ஆகியோர் பார்வையிட்டனர். காயமடைந்த அழகுமுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com