திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம்

திருக்கோவிலூரில் தி.மு.க. வேட்பாளர் பொன்முடிக்கு ஆதரவாக மாவட்ட துணை செயலாளர் டி.என்.முருகன் தலைமையில் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பொன்முடிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த காட்சி.
பொன்முடிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த காட்சி.
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொன்முடி எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக, விழுப்புரம் மத்திய மாவட்ட துணை செயலாளர் டி.என்.முருகன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று வீடு, வீடாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

இதில் திருக்கோவிலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.தங்கம், நகர செயலாளர் ஆர்.கோபி என்கிற கோபிகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், முன்னாள் பேருராட்சி மன்ற துணைத்தலைவர்கள் டி.குணா என்கிற குணசேகரன், ஆர்.மணி, ஒன்றிய துணை செயலாளர் எம்.கே.சங்கர், மாவட்ட பிரதிநிதி கந்தன்பாபு, முன்னாள் கவுன்சிலர்கள் எல்.தங்கராஜ், மகேஷ், வெங்கட், ஐ.ஆர்.கோவிந்த், தொழில் அதிபர் ஜூடியாக் தியாகு என்கிற தியாகராஜன், வாசுதேவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ஜெய்சங்கர், ரவிசெட்டியார், இளைஞரணி நிர்வாகி நவநீதகிருஷ்ணன், தொ.மு.ச. நிர்வாகிகள் ரகு, டி.கே.சரவணன், பச்சையப்பன், கதிர்வேல், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி விக்கி, நகர இளைஞரணி நிர்வாகிகள் ஜாலா, அஜீத், விஷ்னு, நந்தா, புருஷோத்து, ஆர்.மோகன், டி.மோகன் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com