

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கும் விழா நடக்கிறது.
சென்னையில் இந்த விழா முன்கூட்டியே நடத்தப்படுகிறது. இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசிரியர் விருதுகளை வழங்க உள்ளார். சென்னை மாவட்டத்தில் தேர்வான 15 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
வருகிற 5-ந்தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா கலெக்டர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று அந்தந்த மாவட்டத்தில் தேர்வு பெற்றவர்களுக்கு விருது, சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்க உள்ளனர். இந்த ஆண்டு 389 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...பாஸ்போட் திருப்பி கொடுக்கப்பட்டதால் பிரேமலதா துபாய் பயணம்