முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நெகிழ வைத்த பெண் என்ஜினீயர்

பெண் என்ஜினீயருக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் சென்றார். அப்போது, மேட்டூரை சேர்ந்த பெண் என்ஜினீயர் இரா.சவுமியா என்பவர் அளித்த கடிதத்தை படித்து பார்த்த முதல்-அமைச்சர் நெஞ்சம் நெகிழ்ந்தார்.

அந்த கடிதத்தில், ‘என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதித்தொகையாக எனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை நிதியாக கொடுக்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். மேலும் தனது குடும்பசூழ்நிலையை விளக்கியதுடன், எனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால்கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

“மேட்டூர் அணையை திறக்க சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சவுமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com