மெரினாவில் நடைபயிற்சிக்கு மட்டும் மக்களை அனுமதிக்க ஆலோசனை- மாநகராட்சி கமி‌ஷனர் தகவல்

காசிமேடு உள்பட மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ்
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் பாலவாக்கத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி அவசியம் ஆகும். அந்த வகையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் காலை நேரத்தில் நடைபயிற்சிக்கு மட்டும் பொதுமக்களை அனுமதித்துவிட்டு மற்ற நேரங்களில் அவற்றை மூடலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இதுகுறித்து தலைமை செயலாளரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும்.

காசிமேடு உள்பட மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு மக்கள் கூட்டம் கூடுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறோம். இதில் விரைவில் முடிவு எடுத்து அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com