அசாம் சட்டசபை தேர்தல் - வெற்றியை தக்க வைத்து பா.ஜ.க. வரலாற்று சாதனை

அசாம் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று பா.ஜ.க. வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பா.ஜ.க.
பா.ஜ.க.
Published on

126 உறுப்பினர்களுக்கான அசாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கடந்த மார்ச் 27-ம் ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தலும், ஏப்ரல் 1-ம் தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தலும், தொடர்ந்து ஏப்ரல் 6-ம் தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தன.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன.
இதேவேளையில், பா.ஜ.க. கூட்டணியில் அசோம் ஞான பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலை ஆகிய கட்சிகள் இடம் பெற்றன. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு விறுவிறுப்புடன் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், இரவு 11 மணி நிலவரப்படி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது 76 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது.  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com