ராஜஸ்தானில் மிக் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது - விமானி தப்பினார்

ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம் கீழே விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் சூரத்கர் பகுதியில் போர் விமானமான மிக்- 21 விமானத்தில் ஒரு விமானி வழக்கம்போல் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

விமான தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த விமானி எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமானப்படை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com