முதல் இரண்டு இடத்தில் கொலின் முன்றோ, மேக்ஸ்வெல்- கோலி 6-வது இடத்திற்கு பின்னடைவு

ஐசிசியின் டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் கொலின் முன்றோ முதல் இடத்தையும், மேக்ஸ்வெல் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கோலி 6-வது இடத்திற்கு சரிந்துள்ளார். #ICCT20Rankings
முதல் இரண்டு இடத்தில் கொலின் முன்றோ, மேக்ஸ்வெல்- கோலி 6-வது இடத்திற்கு பின்னடைவு
Published on

அதேவேளையில் கடந்த 21-ந்தேதியுடன் முடிவடைந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் கொலின் முன்றோ, மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் கொலின் முன்றோ மூன்று இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். மேக்ஸ்வெல் ஐந்து இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் முதல் இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஆரோன் பிஞ்ச் 2 இடங்கள் பின்தங்கி 4-வது இடத்தை பிடித்துள்ளார். மார்ட்டின் கப்தில் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 இடங்கள் சரிந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். டி20-க்கான தரவரிசையில் விராட் கோலி நீண்ட காலமாக முதல் ஐந்து இடத்திற்குள் இருந்தார். தற்போது முதல் ஐந்து இடத்திற்கு வெளியில் சென்றுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திலும், ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com