சையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை 76 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி- இஷாந்த் சர்மா அசத்தல்

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் நிதிஷ் ராணா, இஷாந்த் சர்மா சிறப்பாக விளையாட, மும்பையை 76 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.
டெல்லி கிரிக்கெட் அணி
டெல்லி கிரிக்கெட் அணி
Published on

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதின. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தவான் (23), ஹிடேன் தலால் (24) ஓரளவிற்கு ரன்கள் அடித்தனர்.

அடுத்து வந்த ஹிம்மத் சிங் 32 பந்தில் 53 ரன்களும், நிதிஷ் ராணா 37 பந்தில் 74 ரன்களும் விளாச டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இளறங்கியது. தொடக்க வீரர்களான யாஷவி ஜெய்ஸ்வால் (0), ஆதித்யா தரே (3), சூர்யகுமார் யாதவ் (7), சித்தேஷ் லாட் (4) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ஷிவம் டுபே 42 பந்தில் 63 ரன்கள் அடித்தாலும், மும்பை அணி 18.1 ஓவரில் 130 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.  இதனால் டெல்லி அணி 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இசாந்த் சர்மா 3.1 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பிரதீப் சங்வான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com