பண்டிகை காலத்தில் 24 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்த சுசுகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் பண்டிகை கால விற்பனையில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 24 சதவகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #suzuki
பண்டிகை காலத்தில் 24 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்த சுசுகி மோட்டார்சைக்கிள்
Published on

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் நவம்பர் மாதம் மட்டும் 53,058 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

அந்த வகையில் அந்நிறுவனம் விற்பனையில் 24.19 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. முன்னதாக நவம்பர் 2017 ஆண்டு சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 42,722 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"சுசுகி தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்று வருவதே இந்தியாவில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மீது நுகர்வோர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இதே வளர்ச்சியை வரும் மாதங்களிலும் பதிவு செய்வோம் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம். மேலும் 2018-19 நிதியாண்டிற்குள் 7.5 லட்சம் என்ற விற்பனை இலக்கை அடைவோம்," 

என சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிர்வாக தலைவர் சடோஷி உச்சிதா தெரிவித்தார்.

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா ஒட்டுமொத்தமாக 56,531 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. முன்னதாக இதே மாதம் கடந்த ஆண்டில் 49,647 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் சுசுகி நிறுவனம் 13.86 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

இதேபோன்று இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் மொத்தம் 4,93,329 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. #suzuki

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com