மேற்கு வங்காளம் உள்ளாட்சி தேர்தலில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி குறுக்கீடு இருப்பதாக பா.ஜ.க சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்த நிலையில், தேர்தலில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
மேற்கு வங்காளம் உள்ளாட்சி தேர்தலில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் வரும் மே மாதம் மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வது நாளையுடன் முடிவடைகிறது. ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்புமனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.

இதனை அடுத்து, அம்மாநில பா.ஜ.க சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பை இன்று அறிவித்த நீதிபதிகள் தேர்தலில் நீதிமன்றம் தலையிடாது என கூறினர்.

பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகி கோரிக்கை விடவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com