இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் - ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் இரட்டை சதம் விளாசி அசத்தல்

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் ஸ்மித்
இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் ஸ்மித்
Published on

மான்செஸ்டர்:

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.

ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 

பொறுப்புடன் ஆடிய ஸ்மித் 26-வது சதத்தை பதிவு செய்தார்.

2-ம் நாள் தேநீர் இடைவெளியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஸ்மித் அபாரமாக ஆடி 211 (319) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்திருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com