சென்னையில் கனமழையால் இதுவரை 17 பேர் உயிரிழப்பு

மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து இல்லை.16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன.
சென்னையில் கனமழையால் இதுவரை 17 பேர் உயிரிழப்பு
Published on

மிக்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

இந்நிலையில், சென்னையில் கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மழைநீரில் மூழ்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து என வெவ்வேறு நிகழ்வுகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து இல்லை.

16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com