எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்- கே.எஸ்.அழகிரி புகழாரம்

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்காக இட ஒதுக்கீடு பெறுவதற்கு தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
கேஎஸ் அழகிரி
கேஎஸ் அழகிரி
Published on

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காமராஜர் ஆட்சியில் 1954-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பிறகு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்தநாளில் அவரது நினைவை போற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

1952 சட்டமன்ற தேர்தலில் உழைப்பாளர் கட்சி சார்பாக போட்டியிட்டு 19 சட்டமன்ற உறுப்பினர்களையும், 4 மக்களவை உறுப்பினர்களும் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.

பிறகு காமராஜர் தலைமையில் அமைந்த ஆட்சி மூலமாக அமைச்சரவையில் பொறுப்பேற்று சமூக நீதி கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உழைப்பாளர் கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்தவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்.

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்காக இட ஒதுக்கீடு பெறுவதற்கு தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன், போற்றுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com