கலிபோர்னியா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். #SouthernCalifornia #CaliforniaMallShooting
கலிபோர்னியா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
Published on

வாஷிங்டன்:

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள டவுசண்ட் ஓக்சில் தீ ஓக்ஸ் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஒருவர் உயிரிழந்தார். அதன்பின் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த துப்பாக்கிச்சுடு சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த வணிக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. #SouthernCalifornia #CaliforniaMallShooting #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com