ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா 263/7

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. #SAvAUS
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா 263/7
Published on

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ரபாடாவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தில் 71.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரபாடா 96 ரன்கள் விட்டுகொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

அதன்பின், தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 11 ரன்னுடனும், நைட்வாட்ச்மேன் ரபாடா 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ரபாடா 29 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 3-வது விக்கெட்டுக்கு டீன் எல்கர் உடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. அம்லாவும், டீன் எல்கரும் அரைசதம் அடித்தனர். மதிய உணவு இடைவேளை வரையில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

தேனீர் இடைவேளை முடிந்ததும் அம்லா 56 ரன்களுடனும், டீன் எல்கர் 57 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும்,
பிலெண்டர் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com