டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) இன்று மாலை காலமானார்.
ஷீலா தீட்சித்
ஷீலா தீட்சித்
Published on

புதுடெல்லி:

டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) இன்று மாலை காலமானார்.

1998-ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் அனுமதிப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 3.55 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 81.

இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com