12-க்கு 3: திணறிய தென்ஆப்பிரிக்காவை மீட்டெடுத்த டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ்

தென்ஆப்பிரிக்கா 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. பின்னர் அணியை சரிவிலிருந்து டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ் ஜோடி மீட்டது. #SAvIND #DeVilliers
12-க்கு 3: திணறிய தென்ஆப்பிரிக்காவை மீட்டெடுத்த டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ்
Published on

தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரிலேயே தென்ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது பந்தில் டீன் எல்கர் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார்.

புதுப்பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனது. இதை பயன்படுத்தி புவனேஸ்வர் குமார் அசத்தினார். 3-வது ஓவரின் கடைசி பந்தில் மார்கிராமை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் ஹசிம் அம்லாவை 3 ரன்னில் வெளியேற்றினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

4-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். டு பிளிசிஸ் நிதானமாக விளையாட டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஸ்வர் குமார் வீசிய 9-வது ஓவரில் டி வில்லியர்ஸ் நான்கு பவுண்டரிகள் விரட்டினார். நேரம் ஆகஆக இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

14.1 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 50 ரன்னைத் தொட்டது. டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி 55 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்கவில்லை. இதனால் தென்ஆப்பிரிக்கா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com