இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Fi பி.எஸ்.-IV இன்ஜின் மாடலின் முன்பதிவு துவங்கியது

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.- IV இன்ஜின் கொண்ட மாடல் விற்பனைக்கு முந்தைய முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது. பி.எஸ்.-IV இன்ஜின் கொண்ட 2017 ஹிமாலயன் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Fi பி.எஸ்.-IV இன்ஜின் மாடலின் முன்பதிவு துவங்கியது
Published on

புதுடெல்லி:

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் மாடல் தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய பி.எஸ்.- IV ரக இன்ஜின் கொண்ட மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய 2017 ஹிமாலயன் பி.எஸ்.- IV ரக இன்ஜின் கொண்டுள்ள மாடல் ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்படும் என ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் நாடு முழுக்க ராயல் என்ஃபீல்டு விநியோகஸ்தர்கள் 2017 ஹிமாலயன் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளனர்.

இன்ஜின்:

ஃபூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் பழைய நம்பர்களை கொண்டு 24.5hp-யை 6,500rpm-இல் இயக்குவதோடு பீக் டார்க்யூ 32Nm இல் 4,250rpm உள்ளது. இதன் திராட்டிள் ரெஸ்பான்ஸ் முந்தைய இன்ஜின்களை விட மென்மையாக இருக்கும்படி ரீஃபைன் செய்யப்பட்டுள்ளது. ஃபைவ்-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட 411சிசி இன்ஜின் மற்ற ராயல் என்ஃபீல்டுகளில் இல்லாத ஃப்ரீ-ரெவ்விங் யூனிட் கொண்டுள்ளது. 

வடிவமைப்பு:

புதிய ஹிமாலயன் வடிவமைப்பில் இதன் அழகை விட செயல்திறனில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது இன்ஜினை பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது. புதிய ஹிமாலயன் வடிவமைப்பு நெடுந்தூர (லாங்-டிரைவ்) பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

இதன் பெட்ரோல் டேங்க்-இன் வெளிப்புறத்தில் இரண்டு ப்ரோவிஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் தண்ணீர் அல்லது பெட்ரோல் உள்ளிட்டவற்றை வசதியாக வைத்துக் கொள்ள முடியும். இதேபோல் பின்புறத்திலும் இரண்டு பேனியர்களை இணைத்துக் கொள்ளலாம்.

சஸ்பென்ஷன்:

முன்பக்க சஸ்பென்ஷன் செட்டப் 200 மில்லிமீட்டர் டிராவல் கொண்ட 41 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் 180 மில்லிமீட்டர் டிராவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வண்டியின் கெர்ப் எடை 182 கிலோவும், ஃபூயல் டேங்க் 15 லிட்டர் பெட்ரோல் கொள்திறனும் கொண்டுள்ளது. 

போட்டி:

புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் நேரடியாக பஜாஜ் டாமினர் 400 மற்றும் மஹேந்திரா மோஜோவுக்கு போட்டியாக அமைந்துள்ளது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com