டி20 போட்டியில் ஒட்டுமொத்த சாதனைகளையும் சொந்தமாக்கினார் ரோகித் சர்மா

டி20 கிரிக்கெட்டில் அதிக சதம், அதிக சிக்ஸர்கள் உள்பட அனைத்து சாதனைகளையும் தன்வசப் படுத்தினார் ரோகித் சர்மா.
ரோகித் சர்மா
ரோகித் சர்மா
Published on

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 பந்தில் 67 ரன்கள் குவித்தார். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 2422 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 107 சிக்ஸ் மூலம் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

21 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து, அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நான்கு சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com