சென்னை திரும்பியதும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டும் ரஜினி காந்த் மாவட்ட நிர்வாகிகளை வருகிற 25-ந்தேதி சந்திக்கிறார். #Rajinikanth
சென்னை திரும்பியதும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
Published on

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். அதோடு அதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள தனது 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை “ரஜினி மக்கள் மன்றம்” என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார்.

32 மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்து அடையாள அட்டையை வழங்கிய ரஜினிகாந்த் அடுத்தக்கட்டமாக மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

தனது புதிய கட்சியில் குடும்ப அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதன்படி அந்த கட்சியில் ஒரு குடும்பத்தினருக்கு ஒரு பதவியே வழங்கப்படுகிறது.

இதற்கிடையே ரஜினிகாந்த் கடந்த 23-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். உடல் பரிசோதனைக்காக அவர் அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு இருந்தாலும் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

அரசியல் தொடங்குவதற்காக ஆரம்ப கட்ட பணிகள் மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டார். தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் வருகிற 5-ந்தேதி தமிழகம் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை திரும்பியதும் அவர் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார். வருகிற 25-ந்தேதி ரஜினி காந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நிர்வாகிகள், ரசிகர்கள் என 8,500 பேரை ரஜினி காந்த் ஒரே நேரத்தில் சென்னையில் சந்திக்க ஏற்பாடு நடைபெறுகிறது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

கட்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர்களை மாவட்ட வாரியாக 5 பேரை தேர்ந்தெடுக்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். அவர் சென்னை திரும்பியபிறகு தலைமை செயற்குழு உறுப்பினர்களை அறிவிக்கிறார்.

காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 9-ந்தேதி நடக்கிறது. இதிலும் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com