விபத்தில் கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் நிதி உதவி

ரெயில் விபத்தில் சிக்கி 2 கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் நிதி உதவி அளித்துள்ளார்.
விபத்தில் கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் நிதி உதவி
Published on

மதுரை:

மதுரை விளாச்சேரியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (வயது 35). கூலித் தொழிலாளி. ரஜினியின் தீவிர ரசிகரான இவர் கடந்த 9-ந் தேதி சென்னையில் நடந்த காலா திரைப்பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவிற்கு சென்றார்.

பின்னர் சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் திரும்பிய போது விபத்தில் 2 கால்களும் நசுங்கியது.

இதில் பலத்த காயம் அடைந்த காசி விஸ்வநாதன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 கால்களும் பலத்த சேதம் அடைந்து இருந்ததால் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்த ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாநில நிர்வாகி வி.எம். சுதாகரை அனுப்பி வைத்து நலம் விசாரித்தார். நிதி உதவியும் வழங்கினார்.

குணமடைந்து வீடு திரும்பும் போதும் ரஜினி நிதி உதவி வழங்குவார் என சிகிச்சை பெற்று வரும் காசி விஸ்வநாதனிடம், சுதாகர் தெரிவித்தார்.

விபத்தில் சிக்கி கால்களை இழந்த ரஜினி ரசிகருக்கு ரஜினிகாந்த் நிதி உதவி வழங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com